கஜேந்திர குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
கஜேந்திர குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக நேற்று (26.08) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இனவாதத்தை விதைப்பதாக அவர் குற்றம் சுமத்தி   பிவித்துரு ஹெல உறுமிய தலைவர் எம்.பி உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர்  பம்பலப்பிட்டி ரஜின மாவத்தையில் அமைந்துள்ள அவரின் வீட்டின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்ற  நீதிமன்ற உத்தரவையும் மீறி குறித்த போராட்டம் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பொலிஸாரின் தலையீட்டுடன் போராட்டகாரர்கள் கஜேந்திரகுமாரின் வீட்டிற்கு 20 மீற்றர் தூரத்திலேயே தடுத்து  நிறுத்தப்பட்டுள்ளனர். 

அத்துடன் பாதுகாப்பிற்காக  பொலிஸ், கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை விமானப்படையினர் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுகிறது. 

 சுமார் ஒரு மணி நேரம் மறியல் செய்ததை அடுத்து குழுவினர் கலைந்து சென்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!