சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் விமான சேவை

#China #Flight #world_news #Breakingnews
Mani
2 years ago
சீனா-இங்கிலாந்து இடையே மீண்டும் விமான சேவை

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகையே ஆட்டி படைத்தது. வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பல நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளன. குறிப்பாக, சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால், ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும், இந்த சூழ்நிலையின் தாக்கம் குறைந்து, நிலைமை படிப்படியாக அதன் வழக்கமான நிலைக்குத் திரும்புகிறது. இதன் காரணமாக ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள் தங்களது சேவையை மீண்டும் தொடர்ந்து வருகின்றன.

அந்தவகையில் சீனாவின் வூகான் நகரில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 88 சதவீதத்தையும், அங்கிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 90 சதவீதத்தையும் எட்டியது. இதனால் இந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட நேரடி விமானம் மீண்டும் இயக்கப்பட்டது.

இதேபோல் துபாய், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற பல்வேறு நாடுகளில் இருந்து 9 விமான சேவைகள் மீண்டும் தொடங்கியதாக சீனாவின் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!