கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணம் நேற்று முடிவடைந்து நேராக பெங்களூர் வந்தடைந்தார் பிரதமர் மோடி
#India
#PrimeMinister
#Breakingnews
Mani
2 years ago

பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று, கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, சொந்த ஊருக்கு புறப்பட்டார். பொதுவாக, அவர் டெல்லிக்கு வந்து இறங்குவார்.
இம்முறை நேரடியாக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூரு வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பேசுகிறார்.இதை தொடர்ந்து அவர்களுடன் உரையாட இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் சந்திரயான்-3யின் வெற்றிகரமான பணியின் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் ஈடுபடுவதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பும் ஆர்வமும்தான் விண்வெளித் துறையில் நமது நாட்டின் சாதனைகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்திகளாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.



