போலி கல்வி சான்றிதழ்களை பயன்படுத்தி உயர் பதவியில் இருந்தவரை கோப் குழு அம்பலப்படுத்தியது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்த நபர் ஒருவர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 12 வருடங்களாக உயர் பதவி வகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக அவர் பணியாற்றியுள்ளதாக கோப் குழு முன்னிலையில் தெரியவந்துள்ளது.
அவர் பல சந்தர்ப்பங்களில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாகவும், அந்தக் காலப்பகுதியில் அவருக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் கோப் குழு வெளிப்படுத்தியுள்ளது.
10 வருடங்களின் பின்னர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் கோப் குழு முன்னிலையில் முதன்முறையாக அழைக்கப்பட்ட போதே இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன.