வயநாட்டில் ஜீப் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு
#India
#Death
#Accident
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
Mani
2 years ago

கேரள மாநிலம் வயநாடு அருகே பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது, மானந்தவாடி பகுதியில் 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், பலத்த காயங்களுடன் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



