லஞ்சம் வாங்கிய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி கைது
#SriLanka
#Arrest
Prathees
2 years ago
இலங்கை போக்குவரத்து சபையின் ஹிகுராக்கொட தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியசென்புர டிப்போவில் பஸ் நடத்துனரிடம் 60,000 ரூபா லஞ்சம் வாங்கச் சென்ற போதே குறித்த அதிகாரி நேற்று மாதிரிகிரிய விஹார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பயணிகளுக்கு டிக்கெட் வழங்காதது தொடர்பாக பஸ் கண்டக்டரிடம் நடத்திய விசாரணையில், விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கியது தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி பொலன்னறுவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.