அமெரிக்காவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் பலி
#Death
#America
#people
#world_news
#GunShoot
#Breakingnews
#Died
#ImportantNews
Mani
2 years ago

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தற்போது பிரபல மதுபான விடுதி ஒன்று செயல்படுகிறது. எதிர்பாராத விதமாக, ஒரு மர்ம நபர் நிறுவனத்திற்குள் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார். இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனையடுத்து அவர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், நெரிசலில் சிக்கி 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிசூடு நடத்திய நபர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.



