வெளிநாட்டு உளவு பிரிவினரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
#SriLanka
#Defense
# Ministry of Defense
Mayoorikka
2 years ago
நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமோ அல்லது நிறுவனத்திடம் இருந்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
(24) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், "நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இனவாத கலவரங்கள் தொடர்பாக எந்த வெளிநாட்டு உளவு நிறுவனத்திடமிருந்தும் எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. இதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன்.
வதந்திகளுக்கு எங்களால் எப்போதும் பதிலளிக்க முடியாது. அதனால்தான் இது தொடர்பாக நான் ,முதலில் பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கிறேன் என்றார்.