வடகொரியாவின் ஏவிய ராணுவ உளவு செயற்கைக்கோள் மீண்டும் ஒருமுறை ஏவப்பட்டு தோல்வி

#India #world_news #NorthKorea #2023 #Breakingnews #Rocket
Mani
2 years ago
வடகொரியாவின் ஏவிய ராணுவ உளவு செயற்கைக்கோள் மீண்டும் ஒருமுறை ஏவப்பட்டு தோல்வி

வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ராக்கெட் வெடித்துச் சிதறி கடலில் விழுந்தது. இன்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது. ஆனால் இதுவும் தோல்வியில் முடிந்தது. வடகொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் இன்று அதிகாலை மல்லிஜியாங்-1 என்ற புதிய வகை ராக்கெட்டில் சோஹே செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலைகளின் விமானங்கள் இயல்பாக செயல்பட்டன.

இருப்பினும், மூன்றாவது கட்டத்தின் அவசர வெடிப்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஏவுதல் தோல்வியடைந்ததாக வட கொரியா கூறியது. மேலும், இந்த தகவலுக்கான காரணம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும் சிக்கலை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு. அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!