தொல்லை தாங்க முடியாமல் மூன்று பக்க கடிதம் எழுதிவிட்டு குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்
தனது ஒரு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்து தாய் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோகி தோட்டத்தில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தாயான மகமணி தயானி (26) மற்றும் அவரது ஒரு வயது மகள் மனோகரன் பிரதிக்ஷா ஆகியோர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
தானும் குழந்தையும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்படுவதாக மூன்று பக்க கடிதம் எழுதி, அந்த கடிதத்தை திருமண சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையுடன் ஏரிக்கரை அருகே வைத்துவிட்டு ஏரியில் குதித்துள்ளார்.
நேற்று (23) காலை லிதுல, லோகி தோட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில் குதித்து தற்கொலை நெய்து கொண்டதாக லிதுல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் சிசிர குமார தெரிவித்தார்.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் டபிள்யூ.ஆர். விஜேவிக்ரம அவர்களால் நடத்தப்பட்டது.
தாயின் சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நிபுணத்துவ சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து குழந்தையின் சடலத்தை கண்டுபிடித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் லிதுலை பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
நுவரெலியா பொலிஸ் உயிர்காப்புப் படையின் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து சிசுவின் சடலத்தைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆனால் சடலம் கண்டுபிடிக்கப்படாததால்இ சிசுவின் சடலத்தைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படையின் உதவியைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.