இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு! சீட்டுக்கட்டு போல் சரிந்த வீடுகள்!

#India #Accident #Rain #HeavyRain #Mountain
Mani
2 years ago
இமாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு! சீட்டுக்கட்டு போல் சரிந்த வீடுகள்!
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், நிலச்சரிவு, மேக வெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் நபர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குல்லு மாவட்டம் உள்ள அன்னி நகரில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை பதிவு செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. மலையடிவாரத்தில் உள்ள கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிவதை அந்த வீடியோவில் காண முடிகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இமாச்சல பிரதேசத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!