மன்னாரில் துப்பாக்கிச்சூடு-இருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Mannar
#Death
#GunShoot
Mayoorikka
2 years ago
மன்னார் பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
உயிரிழந்தவர்கள் மன்னார் நொச்சிக்குளம் மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
சடலம் சம்பவ இடத்தில் இருந்து இது வரை மீட்கப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

