இலங்கை பெருமிதம் கொள்கிறது: சந்திரயான் 3 தொடர்பில் ஜனாதிபதி வாழ்த்து

#India #SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
இலங்கை பெருமிதம் கொள்கிறது: சந்திரயான் 3 தொடர்பில் ஜனாதிபதி வாழ்த்து

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிற்கும் (இஸ்ரோ) இந்திய மக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

 இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, மனித சமூகத்திற்காக இந்திய பிரதமர் மோடி ஆற்றிய இந்த அர்ப்பணிப்பு, எதிர்கால சந்ததியினரை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய ஊக்குவிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!