இலங்கையின் நிலைமை குறித்து அமெரிக்கா ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!

#SriLanka #America #UN
Mayoorikka
2 years ago
இலங்கையின் நிலைமை குறித்து அமெரிக்கா ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட்ட உபதலைவர் சி வி கே சிவஞானம் தெரிவித்தார்.

 வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்ற நிலையில், பிரிதொரு தரப்பினரால் மாகாண சபை முறைமை இல்லாதொழிக்க முயற்சிக்கப்படுகின்றது.

 வரிவிதிப்பினால் வைத்தியர்கள் மற்றும் கல்விமான்கள் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்.

 இந்த நிலைமை மக்களை வெகுவாக பாதித்துள்ளமையினால் இதனை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவசியமாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி வி கே சிவஞானம் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!