பிரமிட் பணப் பரிவர்த்தனை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Central Bank #Lanka4
Thamilini
2 years ago
பிரமிட் பணப் பரிவர்த்தனை குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பிரமிட் பண பரிவர்த்தனைகள் கொண்ட திட்டங்களில் பங்கேற்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

தற்போது இயங்கி வரும் மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களை நடத்தி வரும் 9 நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.  

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆரம்பிக்கின்ற, வழங்குகிற, விளம்பரப்படுத்துகிற, நடத்துகிற, நிர்வகிக்கிற அல்லது எந்தவொரு நபரும் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்கிறார் என்று மத்திய வங்கி கூறுகிறது. 

சில பிரமிட் திட்டங்களை நடத்தும் சில நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியுடன் சில உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூகத்தின் சில பிரிவினர் முன்வைக்கும் கூற்றுக்களை வன்மையாக நிராகரிப்பதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்வாறான நியமிக்கப்பட்ட பிரமிட் திட்டங்களுக்கு வங்கிச் சட்டத்தின் 83 டி பிரிவின் கீழ் குற்றவியல் நடவடிக்கைகளை மாற்றுவது சாத்தியம் என்பதால், இந்த விடயத்தை பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!