ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் உயிரிழந்ததாக சந்தேகம்

#Death #Flight #Russia #Crash
Prasu
2 years ago
ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் உயிரிழந்ததாக சந்தேகம்

ரஷியாவில் வாக்னர் எனும் தனியார் ராணுவ அமைப்பு ரஷிய அதிபருக்கெதிரான கலகத்தை கடந்த மாதம் தொடங்கியது. 

இது பெரும் புரட்சியாக வெடிக்கலாம் என உலகமே எதிர்பார்த்திருந்த நிலையில், ரஷிய அதிபர் புதின் இந்தக் கிளர்ச்சியை சாமர்த்தியமாக அடக்கிவிட்டார். 

அந்த அமைப்பின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவை விட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைந்திருந்தார்.

இந்நிலையில், ரஷியாவின் டிவெர் மாகாணத்தில் நடந்த விமான விபத்தில் 10 பேர் பலியானார்கள் என்றும், அதில் வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசினும் ஒருவர் என அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 விமான பயணிகள் பட்டியலில் பிரிகோசின் பெயர் உள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் பிரிகோசின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தகவல்கள் வெளியாகின.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!