முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ரொஷான்
ஒழுங்காக வேலை செய்யாத அரச ஊழியர்களை தண்டிக்கும் முறையும், பணியை சரியாகச் செய்பவர்களை மதிப்பிடும் முறைமை உருவாக்கப்படாவிட்டால் நாட்டை முன்னேற்ற முடியாது என நீர்ப்பாசன மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாம் ஒரு நாடாக உயர வேண்டுமானால், இந்நாட்டு அரச ஊழியர்களுக்கு அவர்களின் திறமைக்கேற்ப பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமே தவிர, அவர்களின் காலத்திற்கு ஏற்றதாக அல்ல என்றார்.
அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமையினால் நாட்டில் நீர் முகாமைத்துவப் பிரச்சினை மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிகாரிகள் தமது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளர் ஊடாக இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் நீர் பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.