மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்ட போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.
அவருக்கு பதிலாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி லாவ்ரவ் கலந்து கொண்டார். எனினும், காணொலி காட்சி வழியே பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அதிபர் புதின் பேசும்போது, உக்ரைன் மற்றும் ரஷியாவுக்கு இடையேயான போரை பற்றி குறிப்பிட்டார். அதிபர் புதின் பேசும்போது, பல மேற்கத்திய நாடுகள் உலகின் மீது மேலாதிக்கம் செலுத்த விரும்பிய விசயம், உக்ரைனில் கடுமையான நெருக்கடி ஏற்பட வழிவகுத்து விட்டது.
உக்ரைன் நாட்டில் ரஷிய கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆனது, மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்த்து விட்ட படுகொலைக்கான போரை நிறுத்துவதற்கான விருப்பமே ஆகும் என கூறியுள்ளார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேச்சு உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் ரஷியா படையெடுத்தது. இதில், இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர்



