அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு வழங்கப்பட்ட உயரிய விருது!
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனுக்கு விஷ்வ கீர்த்தி, ஸ்ரீ அபிமான, ஸ்ரீஜனரஞ்சன தேசாபிமான்ய என்ற உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை வெஹேரே ஸ்ரீ பூர்வராம விகாரையின் வணக்கத்திற்குறிய மகா சங்கத்தினரின் முன்னிலையில், நேற்று (22.08) பிற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
முப்பெரும் சங்கத்தின் அதி வணக்கத்திற்குரிய கௌரவ மாகாநாயக்க தேரர், முப்பெரும் சங்கத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட தேர்வு குழுவினர் இந்த விருதை பரிந்துரைத்திருந்தனர்.
சிறந்த சேவை, உள்ளார்ந்த திறமை மற்றும் தகுதியான நடத்தை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது.
அல்லிராஜா சுபாஸ்கரன் இலங்கையை பூர்வீகமாக கொண்ட மிகப் பெரிய தொழில் அதிபராவார். தென்னிந்திய சினிமா துறை உள்பட பல தொழில்களில் இவர் வெற்றிகரமாக கால்பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.