பிரித்தானிய மற்றும் அயர்லாந்திற்கான தூதுவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தார்!
#SriLanka
#Britain
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை சமர்ப்பித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பில் உள்ள இத்தாலியின் தூதுவர் டொமியானோ பிராங்கோவியும் தனது நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்துள்ளார்.
மேலும் கொழும்பில் உள்ள ஜேர்மனியின் தூதுவர் பீலிக் நியூமானும் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நற்சான்றிதழை கையளித்தார்.