ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் ட்ரோன் தாக்குதல் - மூவர் பலி!

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதியில் உள்ள உக்ரைன் எல்லையில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கிராமத்தில் உக்ரைன் ஆளில்லா விமானம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 03 பேர் உயிரிழந்ததாக அந்த பிராந்திய ஆளுநர் தெரிவித்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் போரில் ஆளில்லா விமானம் மூலம் ரஷ்யாவில் உயிரிழப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை.
இதற்கிடையில், கருங்கடலின் 'பாம்பு தீவுக்கு' கிழக்கே உக்ரைன் துருப்புக்களை ஏற்றிச் சென்ற அமெரிக்கா தயாரித்த வேகப் படகை அழித்ததாக ரஷ்யா கூறுகிறது.
ரஷ்ய விமானம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கருங்கடலின் வடமேற்கில் உள்ள பாம்பு தீவு, உக்ரைனால் ஒரு இராணுவ தளமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் ரஷ்யா கடந்த மாதம் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பின்னர் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்போர் அதிகரித்தது.



