நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உயிரிழப்பு!

#India #Accident #2023 #Tamilnews #Nepal #Breakingnews
Mani
2 years ago
நேபாளத்தில் ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் 8 பயணிகள் உயிரிழப்பு!

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து 300 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பெனி-ஹில்லி மாவட்டத்தை நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. தாடிங் மாவட்டத்தில் உள்ள கஜூரி பகுதி அருகே வந்தபோது, ​​அருகில் இருந்த திரிசூலி ஆற்றில் பேருந்து கவிழ்ந்தது. அப்போது காத்மாண்டுவில் இருந்து 60 கி.மீ தொலைவில் பேருந்து இருந்தது.

பேருந்தின் ஒரு பகுதி தண்ணீருக்கு அடியில் இருந்ததால் 8 பயணிகள் உயிரிழந்தனர். மேலும், 19 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக மீட்பு குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை தொடங்கினர். உயிரிழந்தவர்களில் 2 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் ஆண்கள். அவர்களை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!