இரண்டு விமானங்களுக்கு ஒரே நேரத்தில் கொடுக்கப்பட்ட சிக்னல் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!

#India #Flight #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
இரண்டு விமானங்களுக்கு ஒரே நேரத்தில் கொடுக்கப்பட்ட சிக்னல் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!

டெல்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அதே சமயம் அகமபாதாபாத் நகரில் இருந்து டெல்லிக்கு வந்த 'விஸ்தாரா' விமானம், டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த இரு விமானங்களுக்கும் ஒரே நேரத்தில் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர், பாக்டோக்ரா நகருக்கு புறப்பட இருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து டெல்லி-பாக்டோக்ரா விமானம் பிரதான ஓடுபாதையில் இருந்து திருப்பப்பட்டு, வேறொரு ஓடுபாதைக்கு மாற்றப்பட்டது. இதனால் மற்றொரு விமானம் பத்திரமாக தரையிறங்கியது. சரியான நேரத்தில் கட்டுபாட்டு அறை அதிகாரிகள் உரிய உத்தரவை பிறப்பித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!