விண்கலம் தரையிறக்கும் நிகழ்வு: மோடி பார்வையிட ஏற்பாடு

#India #PrimeMinister #2023 #Tamilnews #Breakingnews #ImportantNews #Space
Mani
2 years ago
விண்கலம் தரையிறக்கும் நிகழ்வு: மோடி பார்வையிட ஏற்பாடு

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கும் நிகழ்வை தென் ஆப்பிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி காணொளி வாயிலாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் சாதனத்தை இன்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது லேண்டர் நிலவில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை காண்பதற்காக உலக நாடுகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சந்திரயான் 3 விண்கலம் தரையிறக்கும் நிகழ்வை அங்கிருந்து பார்வையிட உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!