மிசோரமில் ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி!

#India #Death #Accident #2023 #Tamilnews #Breakingnews #Died #ImportantNews #Killed
Mani
2 years ago
மிசோரமில் ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி!

மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதிக்கு அருகே கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

மிசோரம் மாநிலத்தில் புதிதாக ரயில்வே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாய்ராங் பகுதியில், 35 முதல் 40 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிந்து விழுந்த ரயில்வே பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து, ஒரு போலீஸ் அதிகாரி கூறியிருப்பதாவது: மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதிக்கு அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து ஏற்பட்டது. மேலும், பணியில் ஈடுபட்டிருந்த சில தொழிலாளர்கள் விபத்தில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இடிபாடுகளில் இருந்து இதுவரை 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரைக் காணவில்லை. என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!