நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதில் சிக்கல்!
#SriLanka
#government
#money
Mayoorikka
2 years ago
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவரை நியமிக்காத காரணத்தால் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொடுப்பனவை செலுத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை கூட்டப்பட வேண்டும் என சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
எனினும், தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமையினால் கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதியை வழங்க முடியாமல் போயுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.