மெனிங்கோகோகல் தொற்று சமூகத்திலும் பரவும் அபாயம்!
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பரவும் மெனிங்கோகோகல் நோய் பரவும் சூழலில், சமூகத்தில் பக்டீரியா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொற்றா நோய் என்பதால், சிறைச்சாலைக்குச் சென்ற நபர்கள், பாதிக்கப்பட்ட கைதிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியிருந்தால், சிறையிலிருந்து பக்டீரியாக்கள் வெளியேறும் வாய்ப்புகள் இருப்பதாக, தொற்று நோய் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், சமூகத்தில் பாக்டீரியா பரவுவதைத் தடுக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
"கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கும் நோய்த்தடுப்பு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. நோயின் முதன்மை மூலத்தை அடையாளம் காண மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அண்மையில் சிறைச்சாலைக்கு வருகை தந்த வெளியாட்களை கண்டறிய சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு (MOH) அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை கருத்தில் கொண்டு காலி வைத்தியசாலையில், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.