பதவியை இராஜினாமா செய்யத் தயார் - மன்றில் பந்துல குணவர்த்தன அதிரடி!
தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல் I அலைவரிசையை தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் நேற்று (22.08) பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தேசிய மக்கள் படைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் இது இடம்பெற்றுள்ளது.
எந்தவொரு வெளிப்படைத்தன்மையும் இன்றி, முறையான டெண்டர் கோரப்படாமல், உரிய கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டதாக அனுர திஸாநாயக்க தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பந்துல குணவர்தன, இந்த ஒப்பந்தத்தில் சட்டவிரோதமான செயல் எதுவும் நடைபெறவில்லை என்றும், மோசடி நடந்திருந்தால், நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும், அப்படியானால், நாளை காலை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் தெரிவித்தார்.