தேசிய ஆக்கத் திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

#Kilinochchi #function #Prize
Prasu
2 years ago
தேசிய ஆக்கத் திறன்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் தேசிய ஆக்கத்திறன்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா இன்று(22) செவ்வாய்க்கிழமை சிறப்புற இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலக திறன் விருத்தி நிலையத்தில், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.ஹ. சத்தியஜீவிதா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) இ.நளாயினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ விருந்தினராக கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி. கமலராஜன், கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ. சிவனருள்ராஜா, கரைச்சி பிரதேச செயலாளர் ப.ஜெயகரன், பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன், ஆகியோரும் விருந்தினர்களாக பிரதம கணக்காளர் க.சி.கஜேந்திரன்,பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.நி.குமுதினி, கண்டாவளை உதவி பிரதேச செயலாளர் சு.துவாரகா,மாவட்டச்செயலக நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.மா.அருந்தவராணி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன் போது விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் பிரதம குருக்கள் ஜெக ஜெகதீஸ்வர குருக்கள் ஆசியுரையினை நிகழ்த்தினார்.

தொடர்ந்து விசேட பாராட்டு பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கல், அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகளின் உரைகள், பரிசில்கள் வழங்கல் முதலான நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றன.

 இந்நிகழ்வில் கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!