கிளிநொச்சியில் நடைபெற்ற கிராம சேவகர் பிரிவுக்கான புத்தெழுச்சி குழுக்கூட்டம்(புகைப்படம் இணைப்பு)
கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கான புத்தெழுச்சி குழுக் கூட்டம் அப் பகுதி அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இன்று நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்ட இச்சந்திப்பில் உத்தியோகத்தர்கள் தரப்பில் இருந்து சமுர்த்தி உத்தியோகத்தர், வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராமசேவகர், மருத்துவ தாதி, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வீதியோரங்களில் பாலம் மற்றும் மதகுகள் அமைந்துள்ள இடங்களில் நடைபெறும் சட்ட விரோத மணல் அகழ்வுகள். காந்தி சிறுவர் இல்லத்தில் அங்குள்ள சிறார்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மை.
வயலில் கலப்பு நெல்லினால் விவசாயிகள் எதிர் கொள்ளும் பாதிப்புகள். குடியுரிமை ஆவணங்களை பெறமுடியாத நிலையில் உள்ள சிறார்களின் எதிர் கால நிலமைகள் .

அசுவெசும உதவித் திட்டத்தில் வசதியான குடும்பங்களும் உள்ளடக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் உண்மைத் தன்மைகள். சத்துணவு குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறார்களின் ஆரோக்கியமற்ற வதிவிடச்சூழல் நிலமைகள். கிராமத்தில் மக்கள் குடியேறாமல் உள்ள வீடுகள் போதைப் பொருள் பாவனைக்கான இடங்களாக மாறியுள்ளமையின் ஆபத்துக்கள்.
கிராமத்தில் குடும்ப பதிவின்றி வதியும் குடும்பங்களை பதிவுக்குட்படுத்துவதில் உத்தியோகத்தர்கள் எதிர் கொள்ளும் சிரமங்கள். வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச சபை ஊடாக அவசியம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளின் நிலமைகள்.

நீர் விநியோகத்துக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் சீராக மூடப்படாமல் இருப்பதன் பாதிப்புக்கள் உட்பட பல விடயங்கள் இச்சந்திப்பில் ஆராயப்பட்டதுடன் உடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.

