வந்தேபாரத் ரெயில் மீது கல்வீச்சு தாக்கு சம்பவம் நடந்தது
#India
#Train
#2023
#Tamilnews
#MetroTrain
#Kerala
#Vande Bharat train
Mani
2 years ago

கேரள மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சேவை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சமீபகாலமாக, மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனூர் இருந்து பரப்பனங்காடி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது.
இந்த தாக்குதலில், ரயில் பெட்டியின் கண்ணாடி ஜன்னலில் விரசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேபோல், கடந்த வாரம் தலச்சேரி-மாஹே ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் பயணம் செய்யும் போது கல் வீச்சு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.



