உமாரா தேசிய கீதத்தை சிதைத்ததாக அறிக்கை சமர்ப்பித்த குழு
சிலோன் பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் தேசிய கீதத்தை சிதைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாடகி திருமதி உமாரா சிங்கவன்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய கீதத்தின் தொனிகளும் உச்சரிப்பும் அரசியலமைப்பை மீறுவதாக சிபாரிசு செய்துஇ இந்த விடயத்தை ஆராய்ந்த குழுஇ பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்தவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அந்த குழு அறிக்கையின்படிஇ தேசிய கீதத்தைப் பயன்படுத்துவதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை பொறுப்புள்ள அமைச்சர் தயாரிக்க வேண்டும் எனவும் இனிமேல், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் பணியாளர்கள் அரசியலமைப்பின்படி செய்ய வேண்டும் எனவும் அனைவருக்கும் தெரியப்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
திருமதி உமாரா சின்ஹவன்ச குழுவினரின் முன்னிலையிலும்,பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக முன்னிலையிலும் தேசிய கீதம் பாடும் போது தற்செயலாக நடந்ததற்கு எழுத்துப்பூர்வ மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.