மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரங்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளம் காரணமாக நான்கு பயணிகள் உயிரிழப்பு

#India #Accident #world_news #2023 #Tamilnews #Mountain
Mani
2 years ago
மாஸ்கோவில் பாதாள கழிவுநீர் சுரங்கப்பாதையை சுற்றிப்பார்த்தபோது திடீர் வெள்ளம் காரணமாக நான்கு பயணிகள் உயிரிழப்பு

மாஸ்கோவில் பல சுற்றுலா வழிகாட்டிகள் தலைநகரின் கழிவுநீர் அமைப்பின் பரந்த சுரங்கங்களுக்குள் பயணிகளை அழைத்துச்சென்று பயணங்களை மேற்கொள்கின்றனர். அவற்றில் சில 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. இதன் சுரங்கங்களை சுற்றிப் பார்ப்பதற்காகவே ஏராளமான சுற்றுலாபயணிகள் இங்கு குவிகின்றனர்.

இந்த நிகழ்வில், மாஸ்கோவின் கழிவுநீர் அமைப்பின் சுரங்கப்பாதை சுற்றுப்பயணத்தில் பங்கேற்ற நான்கு நபர்கள் பரிதாபமாக நீரில் மூழ்கினர். மேலும், பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோவில் பெய்த கனமழையால் பாதாள கழிவுநீர் அமைப்புக்குள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது, இதன் விளைவாக சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில், ஒரு பெண்ணின் உடல் உட்பட மூன்று பேரின் சடலங்கள் அதிகாலையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மோஸ்க்வா ஆற்றில் மேலும் ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுரங்கப்பாதையில் மக்கள் தப்பிக்கக்கூடிய தங்குமிடங்கள் இருப்பதாகவும், ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் நகர்ப்புற ஆய்வாளர் ஒருவர் கூறினார்.

மேலும், சுற்றுப்பயணத்தின் அமைப்பாளர் மீது சட்ட அமலாக்கப் பிரிவு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!