தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
#India
#Rain
#HeavyRain
#2023
#Tamilnews
#Breakingnews
#Chennai
Mani
1 year ago

22-08-2023 அன்று காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-08-2023 முதல் 28-08-2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்த தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



