காலி சிறையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள பல கைதிகள்: கராப்பிட்டியிலிருந்து செல்லும் மருந்துகள்

#SriLanka #Prison #Fever
Prathees
2 years ago
காலி சிறையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள பல கைதிகள்: கராப்பிட்டியிலிருந்து செல்லும் மருந்துகள்

காலி சிறைச்சாலையில் தற்போது பரவி வரும் காய்ச்சலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக கைதிகளுக்கு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய 1080 கைதிகளுக்கு இவ்வாறான மருந்துகள் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். 

 கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் குழுவொன்று சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை பரிசோதனை செய்திருந்தனர்.

 அந்த சிறையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் பல கைதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்போது அந்த சிறையில் தனித்தனியாக அடைக்கப்பட்டுள்ளனர். 

 இதேவேளை, காய்ச்சல் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. 

 காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு கைதிகள் முன்னதாக உயிரிழந்தனர். 

 அவர்களின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!