நடுவானில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த பயணி

இந்தியாவில் விமான பயணத்தின் போது ஆண் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். 62 வயது பயணி மும்பையில் இருந்து ராஞ்சி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார்.
விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது குறித்த பயணி தொடர்ச்சியாக இரத்த வாந்தி எடுத்துள்ளார். பயணியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் விமானம் நாக்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அவசர தேவைகளுக்காக நாக்பூர் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த KIMS-Kingsway மருத்துவமனையின் மருத்துவக் குழு அவருக்குச் சிகிச்சை அளித்தது.
தொடர்ந்து மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காசநோய் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் குறித்த பயணி பாதிக்கப்பட்டிருந்தார். விமானத்தில் இருந்தபடி அதிக அளவு இரத்த வாந்தி எடுத்த அவர், அப்போதே இறந்திருக்கிறார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து உடல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.



