பாராளுமன்றத்தில் குழப்ப நிலை! சபாநாயகர் கடும் பிரயத்தனம்
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாத்தளை-எல்கடுவ ரத்வத்தை உள்ள அரச தோட்டமொன்றைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை தோட்ட பிரதி முகாமையாளர் விரட்டி விரட்டி பீதியை கிளப்பி அவர்களின் வீடுகளை இடித்த சம்பவம் காரணமாக பாராளுமன்றத்தில் கடும் அமளி செவ்வாய்க்கிழமை (22) ஏற்பட்டது.
ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றதால், சபையின் அலுவல்களைக் கட்டுப்படுத்த சபாநாயகர் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரோகினி குமாரி விஜேரத்ன, வடிவேல் சுரேஸ், எஸ்.ராதாகிருஷ்ணன், மனோ கணேசன், எஸ்.வேலு குமார், கின்ஸ் நெல்சன், சமிந்த விஜேசிறி, காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.