நாட்டில் 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு!
#SriLanka
#Sri Lanka President
#Medicine
Mayoorikka
2 years ago
இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் நிலையில் தொடர்ந்து 216 மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருந்துத் தட்டுப்பாடானது குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றமடைந்துள்ள போதிலும் மீதமுள்ள பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்து 216 என்ற குறித்த எண்ணிக்கையை எதிர்வரும் மாதங்களில் 100 ஆகக் கொண்டுவர வேண்டும் என சுகாதாரத்துறையின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.