மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் டிப்பர் வாகனத்தில் மோதி பலி

#SriLanka #Accident #Anuradapura
Prathees
2 years ago
மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் டிப்பர் வாகனத்தில் மோதி பலி

அநுராதபுரம் ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக நேற்று (21) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 கலா ​​ஓயா, யாய 14 காலனி, சமகி மாவத்தையில் வசிக்கும் டபிள்யூ.பி. சஷிகா துலானி வீரசிங்க (36) மற்றும் அவரது 8 வயது மகள் திசானி பிரியன்சா ஆகியோரே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 அந்த வீதியில் 30ஆம் இலக்க கடையிலிருந்து ஜெயந்தி சுற்றுவட்டத்தை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 விபத்து தொடர்பில், கெலகம, மெதவாச்சியை சேர்ந்த 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!