யாழில் வர்த்தகர் ஒருவரின் மகன் சடலமாக மீட்பு!
#SriLanka
#Jaffna
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் மகனுடையசடலம் நேற்று (21.08) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ள்தாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.