எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியை விரிவுப்படுத்த நடவடிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியை விரிவுப்படுத்த நடவடிக்கை!

எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டணியை மேலும் விரிவுபடுத்த ஐக்கிய மக்கள் சக்தி  நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. 

நேற்று (21.08) பிற்பகல் நடத்தப்பட்ட கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்மூலம்  நாட்டை அழிவின் விளிம்பிற்கு இட்டுச் செல்லும் அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

அதற்கமைவாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, தமது கூட்டணியினூடாக விரிவான தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!