பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒருத் தொகையை மீள செலுத்தியது இலங்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடனில் ஒருத் தொகையை  மீள செலுத்தியது இலங்கை!

2021 செப்டெம்பர் மாதம் இலங்கை கொள்வனவு செய்த 200 மில்லியன் டொலர் கடனில் இருந்து 50 மில்லியன் டொலர்களை பங்களாதேஷ் திரும்பப் பெற்றுள்ளது. 

இலங்கை  அனுபவித்த அழுத்தமான அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்காக பங்களாதேஷ் வங்கியால் இலங்கைக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.  

பங்களாதேஷ் வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பேச்சாளருமான Md Mezbaul Haque திங்கட்கிழமை, இலங்கையிடமிருந்து முதல் கொடுப்பனவு ஆகஸ்ட் 17 அன்று பெறப்பட்டது என்று அறிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 30ஆம் திகதிக்குள் இலங்கை மற்றுமொரு தவணையை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

பங்களாதேஷ் வங்கியானது 200 மில்லியன் டொலர் கடனை செப்டம்பர் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்தும் என்று எதிர்பார்க்கிறது.  

நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், பங்களாதேஷ் இந்த பண உதவியை இலங்கைக்கு மூன்று வேறுபட்ட தவணைகளில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!