காலநிலையில் மாற்றம் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Lanka4
#Warning
Thamilini
2 years ago
வளிமண்டலவியல் திணைக்களம் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பமானது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு கவனம் செலுத்தும் மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, மக்கள் அவதானமாக இருக்குமாறும் திணைக்களம் தெரிவித்துள்ளது.