கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் பலி!
#SriLanka
#Kilinochchi
#Lanka4
#Teacher
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஆசிரியர் ஒருவர் இன்று (21.08) உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் உப அதிபரும் பிரபலதமிழ் ஆசிரியருமான ஜீவரஞ்சினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் கடந்த சனிக்கிழமை இரவு கிளிநொச்சியிலிருந்து தனது கணவருடன் உந்துருளியில் வட்டக்கச்சி நோக்கி பயணித்த நிலையில் கிளிநொச்சி நகர் ஏ9 வீதியின் எதிர்திசையில் பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.