உக்ரைனில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் மாஸ்கோவில் விமான போக்குவரத்து பாதிப்பு
#strike
#world_news
#Ukraine
#Drone
#Breakingnews
Mani
2 years ago

இன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. மாஸ்கோ பிராந்தியத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலை முறியடித்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரின் மேற்கில் அமைந்துள்ள ரஸ்ஸ்கி மாவட்டத்தில் உக்ரைனின் ஒரு ட்ரோனை செயலிழக்க வைத்ததாகவும், அருகிலுள்ள இஸ்ட்ரின்ஸ்கி மாவட்டத்தில் மற்றொரு ட்ரோனை அழித்ததாகவும் ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இந்த ட்ரோன்களின் துண்டுகள் அவர்களின் வீட்டின் மீது விழுந்ததில் இரண்டு நபர்கள் காயமடைந்தனர்.
ட்ரோன் தாக்குதலின் விளைவாக மாஸ்கோவில் உள்ள நான்கு பெரிய விமான நிலையங்களில் விமானச் செயல்பாடுகள் தடைபட்டன. இது குறிப்பிடப்பட்ட விமான நிலையங்களில் இருந்து சுமார் 50 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை தடைசெய்யப்பட்டது.



