பிரதமர் நரேந்திர மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்
#India
#PrimeMinister
#D K Modi
#SouthAfrica
#Breakingnews
Mani
1 year ago

15வது பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது, இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (செவ்வாய்கிழமை) தென்ஆப்பிரிக்கா செல்கிறார்.
அங்கு அவர் தென்ஆப்பிரிக்கா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்களை அவர் சந்திக்கிறார். அவர் மாநாட்டில் முக்கிய உரையாற்றவும் உள்ளார். கடந்த ஆண்டு பாலியில் நடந்த சந்திப்புக்குப் பிறகு, சீனப் பிரதமருடன் பிரதமர் மோடி நாளை சந்திப்பை நடத்துகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீவிரவாதத்தை ஒடுக்குவதை பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



