கர்நாடகாவில் ஆளில்லா விமானம் கீழே விழுந்து விபத்து
#India
#Breakingnews
#AirCraft
Mani
2 years ago
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாய நிலத்தில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது.
ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சேதமடைந்த விமானத்தின் துண்டுகள் சிதறி கிடப்பதை காண கிராம மக்கள் குவிந்தனர்.
சிதைந்த பாகங்களை யாரும் எடுத்துச் செல்லக் கூடாது என்று போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.