அசாம் மாநிலத்தில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம்
#India
#Earthquake
#Breakingnews
Mani
2 years ago

அசாம் மாநிலத்தின் மேற்கு கர்பி அங்லாங்கில் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் தீவிரம் குறைவாக இருந்ததால், இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.அதே நேரத்தில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதனால் அவர்கள் நீண்ட நேரம் பீதியில் இருந்தனர்.
இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். அசாம் மாநிலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அசாம் மட்டுமல்லாமல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் அடுக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கங்கள் குறைந்த அளவில் பதிவாவதால் உயிர்சேதம் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



