வெங்காயத்திற்கு 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பு
#India
#Vegetable
#2023
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியை 40 சதவீதம் ஆக விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்தது.
வெங்காயத்தின் விலை செப்டெம்பர் மாதத்திலும் அதிகரிக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும், உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை அதிகரிக்கவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது .



