பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் இருந்து புகை வந்ததால் பெரும் பரபரப்பு
#India
#Railway
#Train
#Breakingnews
#Bangalore
Mani
2 years ago
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் இருந்து புறப்பட்ட 11301 எண் கொண்ட உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 5.45 மணிக்கு பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் நம்பர் மூன்றில் வந்து நின்றது.
பயணிகள் அனைவரும் இறங்கி இருந்த நிலையில் காலை 7.10 மணி அளவில் திடீரென பி-1 மற்றும் பி-2 ஆகிய இரண்டு குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வரத் தொடங்கியது.
இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 20 நிமிடங்களுக்குள் தீயணைப்பு வாகனங்கள் வந்து ரயில் பெட்டியில் இருந்து வந்த புகையை அணைத்தனர்.